சீனாவில் கன மழை – மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிப்பு

தென் பகுதி சீனாவில் 60 ஆண்டுகள் இல்லாத அளவு கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக தென் பகுதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ சீனாவில் தென் பகுதியில் பெய்த கனமழை காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழையில் 7 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கவுண்டான் மாகாணத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு, கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மழை காரணமாக சாலைகள், இரயில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சுமார் 1,77,660 பேர் வேறு இடங்களுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர். 1,700க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இன்னும் சில நாட்கள் சீனாவின் சில பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிந்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

Tamil News