மலேசியாவில் தொடரும் கனமழை,வெள்ளம்: உயரும் பலி எண்ணிக்கை

மலேசியாவில் தொடரும் கனமழை

மலேசியாவில் தொடரும் கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் குறைந்தது 14 பேர் மாண்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

சிலாங்கூரின் ஷா அலாமில் மட்டும் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து 9 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் மூவர் பெண்கள், ஆறு பேர் ஆண்கள்.

பாஹாங்கின் பெந்தோங் அருகே உள்ள ‘ஷெலே’ தங்கும் விடுதியில் காணாமல் போன பெண்ணின் சடலம், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 21) அன்று காலை மீட்கப்பட்டது. அதில் இன்னும் இருவரைக் காணவில்லை. அவர்கள் மாண்ட பெண்ணின் கணவரும் மகனும் ஆவர் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் வெள்ளப் பேரிடரைக் கையாள்வதில் குறைகள் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.