செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் வெள்ளிக்கிழமை (8) பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்டன.
நல்லூர் பிரதேச சபையின் பவுசர் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அகழ்வுப் பகுதியில் தேங்கிய மழை நீர் வெளியேற்றப்பட்டது.
இன்றைய பணிகளில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டதுடன், இதுவரை மொத்தம் 260 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் மழை பெய்தால், நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வுப் பணிகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



