தமிழ்நாட்டில் நாளை மிக கன மழை பெய்யக்கூடும்-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

124 Views

தமிழ்நாட்டில் நாளை மிக கன மழை

தமிழ்நாட்டில் நாளை 18ஆம் திகதி எட்டு மாவட்டங்களில் மிக கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து சென்னை வானிலை மையத்தின் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவிக்கையில்,

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து, தென் மேற்கு வங்க கடல் பகுதியிலும் அதை ஒட்டிய மத்திய மேற்கு கடல் பகுதியிலும் தெற்கு ஆந்திரா, வட தமிழகம் கடல் பகுதியிலும் நாளை நிலவக்கூடும்.

கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து நிலவுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிகழம், புதுச்சேரியில் அதிக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருப்பூர் திருமூர்த்தியில் 13 செ.மீ மழை பெய்துள்ளது.

அடுத்த 3 தினங்களுக்கு தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரியில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை, டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கன மழையும் பிற மாவட்டங்கலில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை தமிழ்நாட்டில் நாளை மிக கன மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும்” என்றார்.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad தமிழ்நாட்டில் நாளை மிக கன மழை பெய்யக்கூடும்-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Leave a Reply