மாங்குளத்தில் மதம் மாற்ற சென்ற குழுவினர் அச்சுறுத்தல் -காவல்துறையில் முறைப்பாடு

257 Views

மாங்குளத்தில் மதம் மாற்ற சென்ற குழுவினர் அச்சுறுத்தல்

மாங்குளத்தில் மதம் மாற்ற சென்ற குழுவினர் அச்சுறுத்தல்: மாங்குளம், கிழவன்குளம் பகுதியில் மதம் மாற்றச் சென்ற சபையைச் சேர்ந்த ஒரு குழுவினர் பொது மகன் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து மாங்குளம் காவல்துறையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாங்குளம், கிழவன்குளம் பகுதிக்கு சென்ற ஒரு குழுவினர் அங்குள்ள வீடு ஒன்றின் முன்னால் நின்று அவ் வீட்டுக் குடும்பஸ்தரை அழைத்து தமது மதத்திற்கு மாறுமாறு கலந்துரையாடியுள்ளனர். இதன்போது  மதம் மாறுவதற்கு அந்த குடும்பஸ்தர் மறுப்பு தெரிவித்த நிலையில் அங்கு சென்ற சபையை சேர்ந்தவர்கள் அவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர், மாங்குளம்  காவல்துறை மற்றும் 119 காவல்துறையினரிடம்  செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர்  மூவரை அவர்களின் வாகனங்களுடன்  கைது செய்துள்ளனர்.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள மாங்குளம் காவல்துறையினர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad மாங்குளத்தில் மதம் மாற்ற சென்ற குழுவினர் அச்சுறுத்தல் -காவல்துறையில் முறைப்பாடு

Leave a Reply