தொடர்ந்து அபகரிக்கப்பட்டு வரும் மட்டு-மேய்ச்சல் நிலங்கள்- வாழ்வாதாரத்தை இழக்கும் தமிழர்கள்

164 Views

கடந்த சில வருடங்களாக மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரை காணி தொடர்பாக பல பிரச்சினைகள் இடம் பெற்றிருந்த நிலையில் இன்றும் கூட அதிக நிலங்களை அபகரிக்கும் செயற்பாட்டில் பெரும்பான்மையினர் ஈடுபட்டுக் கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் மேய்ச்சல் தரையாக அடையாளப்படுத்தப்பட்ட நிலங்களை, விவசாயம் செய்வதற்காக பெரும்பான்மையின மக்களுக்கு ஆளுநரால் தமிழர்களின் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி சுகாஸ் ஆகியோர் தலைமையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற தடை உத்தரவை பெற்றிருக்கின்ற போதிலும் தொடர்ந்து அதிகளவிலான நிலங்களை பெரும்பான்மையினர் அபகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கால்நடைகள் உணவின்றி இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அத்தோடு அவைகளை பெரும்பான்மை இனத்தவர்கள் கொன்றும் வருகின்றனர். இதன் காரணமாக தமது வாழ்வாதாரத்தை அப்பகுதி தமிழ் மக்கள் இழந்து நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply