சீன தூதுவருடன் வடக்கு, கிழக்கு ஆளுநர்கள் சந்திப்பு

145 Views

01 சீன தூதுவருடன் வடக்கு, கிழக்கு ஆளுநர்கள் சந்திப்புஇலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங்க்கும் (Qi Zhenhong) வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்லத் இற்கும் இடையில் மிக அண்மையில் விசேட சந்திப்புக்கள் நடை பெற்றதன.

இந்தச் சந்திப்புக்களின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும் சீனாவுக்கும் இடையில் காணப்படுகின்ற வரலாற்றுத் தொடர்புகள் பற்றி இருவரும் பரஸ்பரம் கலந்துரையாடினார்கள்.

அத்துடன் வடக்கு மாகாணத்திற்கு தடுப்பூசிகளை வழங்கியமைக்கு நன்றிகளைத் தெரிவித்ததோடு, தமது மாகாணத்திற்கு முழுமையாக தடுப்பூசிகளை அளிப்பது தொடர்பில் கரிசனை கொண்டிருப்பதாக ஆளுநர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் எதிர் வரும் காலத்தில் சீனாவுடன் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தி வட மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் பல்வேறு விடயங்களை முன்னெடுப் பதற்கான இருதரப்பினரதும் விருப்பம் வெளியிடப்பட்டது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply