இலங்கை அரசாங்கம்-பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபாய் இழப்பீடு அறிவிப்பு

127 Views

பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபாய்

பாகிஸ்தான் சியால்கோட் நகரில் சித்திரவதைக்குட்படுத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக பிரியந்த குமார தியவடன கடந்த 11 வருடங்களாக ஆற்றிய பங்களிப்பை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண குறிப்பிட்டார்.

மேலும், பிரியந்த குமாரவின் குடும்பத்தின் நலனுக்காக இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரண கூறியுள்ளார்.

Leave a Reply