321 Views
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் இரத்தத்தில் இருந்து ப்ளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டு அதனை கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தீவிரமற்ற, தீவிர, அதிதீவிர கொரோனா தொற்றாளர்கள் 16,236 மத்தியில் நடத்தப்பட்ட 16 பரிசோதனைகளின் அடிப்படையில் பரிந்துரைந்த்ததாகவும் தற்போது மேம்படுத்தப்பட்ட ஆய்வில் ப்ளாஸ்மாவால் பலனிருப்பதாகத் தெரியவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே ப்ளாஸ்மா சிகிச்சை அளிக்கக் கூடாது என உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.
முன்னதாக கொரோனா சிகிச்சைக்கு ப்ளாஸ்மாவை பயன்படுத்த பரிந்துரைத்திருந்ததும் உலக சுகாதார அமைப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.