360 Views
எரிவாயு சிலிண்டர் களஞ்சியத்தை அகற்றக்கோரி யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான விநியோக களஞ்சியத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் கொட்டடி வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள களஞ்சியம் முன்பாகவே இன்று இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் “மக்களின் உயிரா பண பலமா, அச்சமற்ற வாழ்விடம் வேண்டும், உயிர் அச்சுறுத்தலான எரிவாயு களஞ்சியத்தை உடனே அகற்று, தரமற்ற எரிவாயுக் கசிவுக்கு யார் பொறுப்பு” போன்ற வாசகங்களை எழுப்பியிருந்தனர்.