‘அடுத்து வரும் நாட்கள் முக்கியமானவை’ இந்திய அரசு எச்சரிக்கை

2021 5largeimg 1699067327 'அடுத்து வரும் நாட்கள் முக்கியமானவை' இந்திய அரசு எச்சரிக்கை

கொரோனாத்  தொற்றுக்கு எதிரான போரில் அடுத்து வரும் 100-125 நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று இந்திய அரசு  எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா முதல் அலையின் போது நாடு முழுவதும் தினசரி பாதிப்பு அதிக பட்சமாக 98 ஆயிரம் வரை பதிவானது.

மேலும் கொரோனா 2-வது அலை மே மாதம் உச்சத்தை தொட்டது. அப்போது அதிக பட்சமாக தினசரி பாதிப்பு 4 இலட்சத்து 14 ஆயிரம் ஆக இருந்தது. தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்புகள் 38,079 ஆக குறைந்துள்ளது.

இந்நிலையில், இந்த எண்ணிக்கை குறைவை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ‘நிடி ஆயோக்’ உறுப்பினர் மருத்துவர் வி.கே. பால் கூறியுள்ளார்.

ஜூலை இறுதிக்குள்ள 50 கோடி கொரோனா தடுப்பூசி வழங்க இலக்கு வைக்கப் பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம், தடுப்பூசி போடுவதை அதிகரிக்கா விட்டாலும் கட்டுப்பாடுகளை தளர்த்தினாலும் 3-வது அலை மிகவும் எழுச்சியாக காணப்படும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 'அடுத்து வரும் நாட்கள் முக்கியமானவை' இந்திய அரசு எச்சரிக்கை

Leave a Reply