திலீபனின் சிலை அகற்றத்துடன் அரசாங்கம் தொடர்புபடவில்லையாம்: அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு

திலீபனின் திருவுருவச்சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்திற்கும் எவ்விதத்திலும் தொடர்புபடவில்லையென கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பூநகரி பிரதேச செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.நல்லூரில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்துடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்விதத்திலும் தொடர்படவில்லை. தென்னிலங்கை மற்றும் வடக்கிலுள்ள ஒருசில அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக மக்களிடையே மீண்டும் இனவாதம், மதவாதம் மற்றும் பிளவுகளை ஏற்படுத்த முயல்கின்றனர் என குற்றம் சுமத்தியுள்ளார்.