அராஜகமான முறையில் அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது -சுமந்திரன்

maxresdefault 5 அராஜகமான முறையில் அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது -சுமந்திரன்

எதிர்ப்புப் போராட்டங்களை அரசாங்கம் கையாளுகின்ற முறையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

போராட்டங்கள் நடத்துபவர்கள் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் என்ற நடவடிக்கையின் கீழ் தடுத்து வைக்கப்டுகின்றனர். இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

“ஒரு ஜனநாயக சூழலிலே மக்கள் அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது யாருக்கோ எதிர்ப்பை காண்பிப்பதற்கான சூழல் நிச்சயம் இருக்க வேண்டும். கொரோனாவை சாட்டாக காண்பித்து கொண்டு, பாதுகாப்பு படையினரை ஏவிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வது,  நீதிமன்றம் பிணையில் விடுவித்தாலும்  தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்வதாக சட்ட விரோதமாக கடத்தி செல்வதும், சட்ட விரோதமாக  தடுத்து வைப்பதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் உட்பட மற்றும் பலர் கைது செய்யப் பட்டுள்ளார்கள். இவர்கள் கைது செய்யப்பட்ட முறைகளை நாங்கள் காணொளி முலம் பார்த்தோம்.

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருகிறார் என்பதற்காக  நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் மற்றும் பல இடங்களிலும் பட்டாசு கொழுத்தி கொண்டாடுகிறார்கள். யாழ்ப்பாணத்திலும் பட்டாசு கொழுத்தப்பட்டது.  இதனை காவல் துறையினர் தடுக்கவில்லை.

மக்கள் ஒன்று கூடக் கூடாது என்றால் இதற்கும் அனுமதியில்லை. அவர்களையும்  காவல் துறையினர் கைது செய்திருக்க வேண்டும்.

தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடமாடுவதை தடுப்பதற்கோ எதிர்ப்பு போராட்டங்களை நிறுத்துவதற்கோ சட்டத்தில் இடம் கிடையாது. தாங்கள் நினைத்தபடி அராஜகமான முறையில் அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 அராஜகமான முறையில் அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது -சுமந்திரன்

Leave a Reply