யாழ். சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்பு

140392 dead body யாழ். சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்பு women body யாழ். சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியிருந்த இராமாவில் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கஜேன் (வயது 28) என்பரே உயிரிழந்துள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் அவருடைய சடலம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவருடைய மரணம் கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில்  காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சிவகுமார் கஜேன் யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படுவதாக தமிழ் காங்கிரஸ் கட்சியினரால் ஏற்கனவே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பட்டியலில் ஒருவராக இணைக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி – அருவி

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 யாழ். சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்பு