ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகளால்  இதய அழற்சி ஏற்படலாம்: ஐரோப்பிய மருத்துவ முகமை

119341069 hearthealthgettyimages 1279332419 ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகளால்  இதய அழற்சி ஏற்படலாம்: ஐரோப்பிய மருத்துவ முகமை

மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 19 பேருக்கு மையோ கார்டிட்டிஸ் மற்றும் 19 பேருக்கு பெரி கார்டிட்டிஸ் ஏற்பட்டிருக்கிறது என்று ஐரோப்பிய மருத்துவ முகமையின் பகுப்பாய்வில் தெரிய வந்திருக்கிறது.

இந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் ஐந்து பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். அந்த ஐவரும் வயதானவர்கள், தவிர அவர்களுக்கு மற்ற பல உடல்நலக் கோளாறுகள் இருந்ததாகவும் பகுப்பாய்வில் தெரிய வந்திருக்கிறது.

இது தொடர்பாக பிரிட்டன் மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்காற்று முகமை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனாவுக்கான ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளின் அரிதான பக்க விளைவாக இதய அழற்சி ஏற்படக் கூடும் என்று ஐரோப்பிய ஒன்றிய மருந்து ஒழுங்காற்று அமைப்பு கூறியுள்ளது.

பொதுவாக இந்த மாதிரியான பக்க விளைவுகள், இளம் வயது ஆண்களுக்கு ஏற்படுவதாகவும் கொரோனா தடுப்பூசியினால் ஏற்படும் நன்மைகள், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை விட அதிகமாக இருப்பதாகவும் ஐரோப்பிய மருத்துவ முகமை கூறியுள்ளது.

இருப்பினும், மருத்துவர்களும் நோயாளிகளும் இதயத்தில் ஏற்படும் அழற்சி சார்ந்த அறிகுறிகள் குறித்து விழிப்போடு இருக்க வேண்டும் என்றும அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகளால்  இதய அழற்சி ஏற்படலாம்: ஐரோப்பிய மருத்துவ முகமை