பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தம்மை கைது செய்வதையோ அல்லது தடுப்புக் காவலில் வைப்பதையோ தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (01) நிராகரித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோரைக் கொண்ட இருவர் அடங்கிய நீதிபதிகள் குழாம், மனு தொடர்பான சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.



