இலங்கை – இந்தியாவுக்கிடையிலான சமுத்திர பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சமுத்திரப் பிரச்சினைகள், இருதரப்பு விவகாரங்கள் மற்றும் பன்னாட்டு அரங்குகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலொன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள், பொருளாதார மற்றும் சமூகப் பிரிவின் மேலதிக செயலாளர் கலாநிதி அக்வினோ விமல் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் சட்ட ஆலோசகர் திலானி சில்வா ஆகியோருக்கு இடையில் கடந்த செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் இக்கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
கடற்பாறைஃசமுத்திரப் பிரச்சினைகள், இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச ஐ.நா போன்ற பன்முக அமைப்புகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் மேலும் தெரிவித்துள்ளது.