புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்டபத்தை இஸ்ரேலிய படையினருக்கு வழங்குவதற்கு கூகுள் நிறுவனம் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருவதாக த வொசிங்டன் போஸ்ட் நாளேடு இந்த வாரம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய பின்னர் செயற்கை தொழில்நுட்ப நுண்ண றிவு மூலம் புலயான்வுத் தகவல்கள் மற்றும் இருப்பிடங்களை கண்டறி யும் தொழில் நுட்பத்தை இஸ்ரேலிய படையினருக்கு வழங்கு வதற்கு கூகுள் நிறுவனம் ஆர்வமாக உள்ளது. ஆனால் அதனை இஸ் ரேலிய படையினர் அப்பாவி மக் களை கூட்டமாக படுகொலை செய்வதற்கு பயன்படுத்தலாம் என அதற்கு எதிராக கூகுள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களும், செயற்பாட்டாளர்களும் தமது எதிர்ப்புக்களை தெரி வித்து வரு கின்றனர்.
தாம் இஸ்ரேலிய படையின ருக்கு உதவி செய்வதில்லை என கூகுள் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு தெரிவிக்கின்ற போதும், அது இஸ்ரேலய படையினருடன் இணைந்து பணியாற்றி வருவது அங்கு கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஹமாஸ் படையினரின் தாக்குதல்களை தொடர்ந்து தமக்கு கூகுள் நிறுவனத்தின் Vertex போன்ற மென்பொருட்களின் உதவி தேவை என இஸ்ரேலிய இராணுவம் கோரிக்கை விடுத்திருந்தது. அதேபோல கடந்த நவம்பர் மாதமும் கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதற்கான கோரிக்கையை இஸ்ரேலிய படையினர் விடுத்திருந்ததை ஆவணங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
2021 ஆம் ஆண்டு Nimbus என்ற திட்டத் தின் அடிப்படையினல் கூகுள் மற்றும் அமேசன் நிறுவனங்கள் இஸ்ரேலுடன் செயற்கை நுண்ணிறிவு மற்றும் cloud storage போன்ற தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பான 1.2 பில்லியன் டொலர்கள் பெறுமதி யான திட்டத்தில் கையொப்பமிட்டிருந்தன.
இஸ்ரேலிய படையினருக்கு கூகுள் நிறு வனம் உதவி செய்வதற்கு எதிராக குரல் கொடுத்த 50 இற்கு மேற்பட்ட பணியாளர்களை கூகுள் நிறுவனம் கடந்த வருடம் பதவியில் இருந்து நீக்கியிருந்தது. அமேசனுக்கு போட்டியாக இஸ் ரேலுக்கு உதவி செய்வதில் கூகுள் நிறுவனம் அதிக அக்கறை காண்பித்து வருவதாக அந்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
வோசிங்டன் போஸ்ட் பத்திரிகை அமே சன் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.