கூகுள் நிறுவனத்தில் இருந்து விலகும் கறுப்பினப் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Google reports soaring attrition among Black women

கூகுள் நிறுவனத்தில்,   கறுப்பின மற்றும் லத்தீன் அமெரிக்கர்கள் பணியில் இருந்து விலகும் வீதம் கடந்த 2019ம் ஆண்டை விட கடந்த ஆண்டில் அதிகரித்திருப்பதாக அந்த நிறுவனத்தின் வருடாந்திர பன்முகத்தன்மை அறிக்கை தெரிவித்துள்ளது.

தேய்வு குறியீடு என கூகுளால் அழைக்கப்படும் வேலை விட்டு விலகும் விகிதத்தின்படி, அமெரிக்காவில் 112ஆக இருந்த விகிதம் கடந்த ஆண்டு 121ஆக அதிகரித்துள்ளது. இதே போன்று 97ஆக இருந்த லத்தீன் அமெரிக்கர்கள் விகிதம் 105ஆக அதிகரித்துள்ளது ன தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெண்கள் விகிதத்தைப் பொறுத்தவரையில், லத்தீன் அமெரிக்கப் பெண்கள் 93ல் இருந்து 81ஆக குறைந்துள்ளபோதும், கறுப்பின பெண்களின் விகிதம் 110ல் இருந்து 146ஆக அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

அத்தோடு வெள்ளை இனத்தவரைப் பொறுத்தவரையில் 117ல் இருந்து 112 வரை குறைந்திருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.