ரஸ்யாவின் கோரிக்கைக்கு இணங்கியது ஜேர்மன் நிறுவனம்

எரிபொருட்களை பெறவேண்டும் என்றால் தாம் பரிந்துரை செய்துள்ள நிதிப் பரிமாற்ற முறையையே பின்பற்ற வேண்டும் என்ற ரஸ்யாவின் கோரிக்கையை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதாக ஜேர்மனியின் மிகவும் பெரிய எண்ணை கொள்முதல் நிறுவனமான யுனிப்பர் தெரிவித்துள்ளது.

உக்ரைன் போரை தொடர்ந்து ரஸ்யா மீது மேற்குலகம் பொருளாதார தடைகளை கொண்டுவந்திருந்தது. ரஸ்யாவின் வங்கிகளும் தடை செய்யப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்தே ரஸ்யா தனது நட்பு நாடுகளின் பட்டியலில் இல்லாத நாடுகளுக்கு இந்த புதிய நிதிப் பரிமாற்று முறையை அறிவித்திருந்தது.

ரஸ்யாவின் பண பரிமாற்ற முறையின் பிரகாரம் எரிபொருட்களை கொள்வனவு செய்யும் நிறுவனங்கள் தாம் விரும்பிய பணத்தில் ரஸ்யாவின் எண்ணை நிறுவனமான கஸ்போரத்திற்கு நிதியை செலுத்த முடியும், ஆனால் கஸ்போரம் அதனை ரூபிளில் மாற்றியே ரஸ்யாவுக்கு வழங்கும். இந்த அறிவிப்பினால் பொருளாதார தடையின் பின்னர் கடும் வீழ்ச்சி கண்ட ரஸ்யாவின் ரூபிள் நாணயம் தற்போது போருக்கு முன்னர் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளது.

இவ்வாறு நிதியை செலுத்த முடியாது என போலந்தும், பல்கேரியாவும் தெரிவித்துள்ளதை தொடர்ந்து கடந்த புதன்கிழமை (27) ரஸ்யா இந்த நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியுள்ளது.

ரஸ்யாவின் இந்த நடவடிக்கையினால் ஐரோப்பிய யூரோ நாயணம் ஐந்து வருடம் காணாத வீழ்ச்சியை அடைந்துள்ளதுடன் ஐரோப்பிய நாடுகளும் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. ஐரேப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் 23 நாடுகள் ரஸ்யாவின் எரிபொருட்களை கொள்வனவு செய்து வருகின்றன.

இதனிடையே, ஒஸ்ரியா ரூபிளில் எரிபொருளை வாங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதுடன், மேலம் 10 ஐரோப்பிய நாடுகள் ரஸ்யாவின் வங்கிகளில் கணக்குகளை திறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil News