“இலங்கை மக்களுக்கு உதவ நாங்கள் தயார்”இராமேஸ்வரம் மீனவர்கள்

இலங்கை மக்களுக்கு உதவ நாங்கள் தயார்

இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப மத்திய அரசை அனுமதிக்கக் கோரி தமிழக சட்டமன்றத்தில் வெள்ளிக் கிழமையன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அதனையடுத்து, தங்களின் படகுகளில் உதவி பொருட்களை அனுப்ப தயாராக உள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் தலைவரான ஜேசுராஜா தெரிவித்துள்ளதாக ‘டெய்லி மிரர்’ செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

“80 கோடி மதிப்பிலான 40,000 டன் அரிசி, 28 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள், 15 கோடி ரூபாய் மதிப்பிலான குழந்தைகளுக்கான 500 டன் பால் பவுடர் மற்றும் பிற பொருட்களை அனுப்ப மாநில அரசு முடிவு செய்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர் ஆணையம் மூலமே அவற்றை மாநில அரசு அனுப்ப முடியும்”, என ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த தீர்மானத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், இலங்கைக்கு உதவி பொருட்களை கொண்டு செல்ல இராமேஸ்வரத்தில் உள்ள இயந்திர படகுகளை பயன்படுத்தலாம். அங்கு மக்கள் கஷ்டப்படும் போது, அவர்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருப்போம்” என்று ஜேசு ராஜா கூறினார்.

Tamil News