வன்முறை களமாகும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் – இன்று முதல் இராணுவத்தினர் குவிப்பு

வன்முறை களமாகும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

வன்முறை களமாகும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்படும் அமைதியின்மை நிலையை கட்டுப்படுத்தும் வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கண்காப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலை நீடித்துவரும் நிலையில் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு கொலைச் சம்பவம் இடம்பெறுமளவுக்கு சென்றுள்ளது.

அத்துடன் நீண்ட நேரம் வரிசையில் நின்ற காரணத்தினால் உடல்நிலை பாதிப்பிற்குள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்களும் பதிவாகிவருகின்றன.

இந்நிலையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்தும் நோக்கில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் நிலைமையைக் கட்டுப்படுத்த இவ்வாறு இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக,  இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடுமையான நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

May be an image of 7 people

கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் நிற்பதே இதற்கு  காரணமாகும். இன்றைய நாட்களில் எரிபொருளைப் பெறுவதற்குப் போராடும் மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டு வருவதனை அவதானிக்க முடிகிறது. இதன் விளைவாக, மக்களிடையே தகராறுகள் ஏற்படுவதுடன் நேற்று முன்தினம் கொலைச் சம்பவமொன்றும் பதிவாகியது.

May be an image of 5 people, people standing and outdoors

அத்துடன் மிக சமீபத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த முதியவர்கள் இருவர் உயிரிழந்த நிலையில், எரிபொருள் நிரப்பு நிலைய வரிசைகளில் காத்திருந்த 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனை தொடர்ந்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தீவிர கண்காணிப்புகளை மேற்கொள்ளும் நோக்கில் இராணுவத்தினரை ஈடுபடுத்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Tamil News