கனடா, பிரித்தானியா தவிர ஏனைய சர்வதேச தரப்புக்கள் தமிழினப் படுகொலையை ஏற்பதில் தயக்கம் : கஜேந்திரகுமார் குற்றசாட்டு

கனடா, பிரித்தானியா தவிர ஏனைய சர்வதேச தரப்புக்கள் தமிழினப் படுகொலை நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதற்கு தயங்குவதுடன் எங்கெங்கெல்லாம் அதனை தவிர்க்க முடியுமோ தவிர்த்து வருகின்றது என்று தமிழ்த் தேசியப்பேரவையின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பட்டால் செம்மணி உள்ளிட்ட தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரி நேற்று முன்னெடுக்கப்பட்ட பேரணியின் இறுதியில் நல்லூர் கிட்டுபூங்காவில் ‘தமிழ் மக்களின் நீதிக்கான குரல்’ எனும் தொனிப்பொருளில் உள்ளகப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கின்றோம், சர்வதேச விசாரணையை ஐ.நா.பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பிரகடனக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.