இலங்கையில் இயங்கும் குற்றக்குழுக்கள் முற்றாக அளிக்கப்படும் : ஜனாதிபதி உறுதி

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் விவகாரங்களில் அரசாங்கம் எவ்வித சமரசங்களுக்கோ அல்லது மன்னிப்புக்கோ தயார் இல்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொலன்னறுவையில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் இயங்கி வரும் ஆயுதம் ஏந்திய குற்றக் கும்பல்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

வெளிநாடுகளில் இருந்து கொண்டு, உள்நாட்டில் குற்றக் குழுக்களை இயக்கிய 70க்கும் மேற்பட்டோர் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதேவேளை, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த மரண தண்டனையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனச் சமூகத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.

இருந்த போதிலும், அது குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவொரு இறுதித் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.