எரிபொருள் தட்டுப்பாடு- ஆசரியர்களை பெரிதும் பாதித்துள்ளது-அதிபர் ஜெரோம்

92 Views

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை காரணமாக பாடசாலைகளுக்கு செல்வது  பெரும் பிரச்சினையாக உள்ளதாக திருகோணமலை விபுலானந்தா கல்லூரி அதிபர் ஜெரோம் தெரிவித்தார்.

எரிபொருள் பிரச்சினை தொடர்பில்  கருத்து தெரிவித்த அவர்,   “தூர பிரதேசங்களில் இருந்து பாடசாலைக்கு ஆசிரியர்கள் செல்வது கடினம். பெற்றோல் இன்மை பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. திடீரென   பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மூன்று நாட்கள் அங்கு இங்கு சுற்றி பெற்றோலுக்காக அலைந்த நிலையில் உள்ளோம்.

பேருந்து போக்குவரத்து கூட  ஒரு நேர அட்டவணையில் இல்லை.   சில வேளை எரிபொருள் கிடைக்காது விடுமுறையும் எடுக்க வேண்டிய நிலை  ஆசிரியர்களுக்கு ஏற்படுகின்றது. ஆனாலும் எங்களது பாடசாலை திட்டங்களை மேற்கொண்டே வருகிறோம். மாணவர்களும் இதன் விளைவாக பல  இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.  சுமார் பல மைல் தூரம் சென்று   கற்றல் நடவடிக்கைகளில் ஆசரியர்கள் ஈடுபட வேண்டியுள்ளது. எல்லாவற்றுக்கும் பிரதான இந்த எரிபொருள் நெருக்கடி நிலைமை முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும்“ என்றார்.

Tamil News

Leave a Reply