யாழ்ப்பாணத்தில் நால்வர் கொரோனாவால் மரணம்!

433 Views

யாழ்ப்பாணத்தில் நால்வர் கொரோனாவால் மரணம்!யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை மேலும் நால்வர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அச்சுவேலியைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த 39 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், பருத்தித்துறை இமையாணன் பகுதியில் மயங்கி வீழ்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181ஆக உயர்வடைந்துள்ளது.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply