வவுனியாவில் டயலொக் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி 25 ஆயிரம் ரூபா பணத்தை மோசடி செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
யுத்தத்தில் கணவனை இழந்த ஒரு பிள்ளையுடன் வாழ்ந்து வரும் பெண் ஒருவரே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார்.
“டயலொக் தொலைபேசி இலக்கமாகிய 0741188986, 07685555065, 0762586660 மற்றும் 0774799175 ஆகிய இலக்கங்களிலிருந்து தன்னிடம் அழைப்பை ஏற்படுத்தி, டயலொக் நிறுவனத்தின் உயரதிகாரி என தெரிவித்து யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசிடமிருந்து பணம் பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இயங்கும் ஈசி காஸ் சேவை நடைபெறும் வியாபார நிலையங்களினூடாக இவ்வாறான மோசடி சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான மோசடி ஊடாக பலர் தங்கள் பணங்களை இழந்துள்ளனர்.
அப்பாவி மக்களின் அறியாமையை பயன்படுத்தி, தொடர்ச்சியாக நடைபெறும் இவ்வாறான மோசடி நடவடிக்கைக்கைகளுக்கு காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.