இலங்கையில் மேலும் 167 பேர் கொரோனாவுக்குப் பலி

452 Views

Corona Dead 8 இலங்கையில் மேலும் 167 பேர் கொரோனாவுக்குப் பலிஇலங்கையில் மேலும் 167 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று முன்தினம் சாவடைந்துள்ளனர். இதுவே இதுவரை ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனா மரண எண்ணிக்கையாகும்.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 263 ஆக அதிகரித்துள்ளது என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் உயிரிழந்த 167 பேரில் 103 ஆண்களும், 64 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதில் ஓர் ஆண் 30 வயதுக்குட்பட்டவர். 22 ஆண்கள், 16 பெண்கள் என 36 பேர் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 130 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில் 80 ஆண்களும், 50 பெண்களும் அடங்குகின்றனர்.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply