தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்ற வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது 

99 Views

தாய்லாந்தின் Hat Yai மாவட்டத்திலிருந்து மலேசியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற மியான்மர் நாட்டை சேர்ந்த 101 புலம்பெயர் தொழிலாளர்களும் இவர்களை அழைத்துச் சென்ற 2 தாய்லாந்து நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

Seized Truck தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்ற வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது 

உள்ளூர்வாசி கொடுத்த தகவலின் அடிப்படையில், 10 சக்கர வாகனத்தை சோதனையிட்ட காவல்துறை, குடிவரவுத்துறை அதிகாரிகள் அதிலிருந்த புலம்பெயர் தொழிலாளர்களை சிறைப்பிடித்து இருக்கின்றனர்.

இதில் கைதாகிய 82 ஆண்கள், 19 பெண்கள் உள்ளிட்ட 101 பேரும் சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் நுழைய மியான்மரிகள் என தாய்லாந்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply