பங்காளதேசத்தில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் தீ விபத்து- 52 பேர் பலி

2021 07 08T183717Z 1174867835 RC2IGO9UT5J3 RTRMADP 3 BANGLADESH FIRE பங்காளதேசத்தில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் தீ விபத்து- 52 பேர் பலி

பங்காளதேஷ் தலைநகர் டாக்காவில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள நாராயண்கஞ்ச் மாவட்டத்தில்  உணவு பதப்படுத்தும் தொழிற் சாலையின் கட்டிடத்தின் 6வது தளத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றிய தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.  இந்த சம்பவத்தில்  52பேர் உயிரிழந்து ள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.

2021 07 09T082317Z 2068087278 RC2VGO965UDK RTRMADP 3 BANGLADESH FIRE பங்காளதேசத்தில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் தீ விபத்து- 52 பேர் பலி

அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.  இது தவிர்த்து 30 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான சரியான காரணங்கள் இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு விதி முறைகளில் உள்ள தளர்வுகள் காரணமாக   இவ்வாறான தீ விபத்துக்கள் பங்களாதேஷில்  அடிக்கடி நடை பெறுகின்றன.

முன்னதாக 2019ம் ஆண்டு அடுக்கு மாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்துக் காரணமாக 70 பேர் வரையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 பங்காளதேசத்தில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் தீ விபத்து- 52 பேர் பலி

Leave a Reply