இளைஞர்களின் தொழில் வாய்ப்பு விடயங்களில் கவனம் செலுத்துங்கள், நோர்வே நெதர்லாந்து துாதுவர்களிடம் கோரிக்கை

இளைஞர்களின் தொழில் வாய்ப்பு விடயங்களில் கவனம்

நோர்வே  உயர்ஸ்தானிகர் Trine Joranli மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் Tanja Gonggrijp ஆகியோர் இலங்கை விஜயத்தின் போது திருகோணமலை மாவட்டதிற்கும் வருகை தந்திருந்தனர். 

இதையடுத்து அவர்களை  இளைஞர் பாராளுமன்ற அமைச்சர்  முஹம்மட் சபான் இன்று சர்வோதய நிலையத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது இளைஞர்களின் தொழில் வாய்ப்பு விடயங்களில் கவனம் செலுத்துங்கள் என  நோர்வே நெதர்லாந்து துாதுவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மாவட்டத்தின் எதிர்காலம் மற்றும் எதிர்கால முன்னேற்ற  வளர்ச்சி பற்றியும் , மாவட்டமானது சுற்றுலாத்துறைக்கு பெரிதும் பெயர் பெற்றது பற்றியும் உயர்ஸ்தானிகர்களிடத்தில் எடுத்துரைக்கப்பட்டது.    சுற்றுலா துறை வளர்ச்சிக்கு உதவுமாறும் இவ்வாறான வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியமானது. இளைஞர்களின் திறமைகளை எழுச்சி அடையச்செய்வது காலத்தின் தேவையாக உள்ளது.  அதற்கு பொருத்தமான முன்மொழிவுகளையும் இதன் போது  வழங்கி வைக்கப்பட்டது.

அதுமட்டுமன்றி கிழக்கு மாகாணத்தில்  காணப்படுகின்ற 45 பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணப்படும் இளைஞர் யுவதிகளுக்குக்  காணப்படும் குறைகள் மற்றும் பற்றாக்குறைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதுடன், இன நல்லிணக்கம் சம்மந்தமாகவும்,  எதிர்காலத்தில் இளைஞர் யுவதிகளை கொண்டு நாட்டை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்பது பற்றியும், தெளிவான  முறையில் மேலும் கலந்துரையாடப்பட்டது

பாடசாலை கல்வியை இடையில் கைவிட்ட மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்குமான  National Vocational Training Center ஒன்று அமையப் பெறவேண்டும் .

சுயதொழிலில் ஈடுபடும் இளைஞகளுக்கான நுண்கடன் வளங்கள் சரியாக வழங்குவதன் ஊடாக இளைஞர் அபிவிருத்தியில் பொருளாதார முன்னேற்றங்களை கண்டு கொள்ள முடியும், தற்கால இளைஞர்களின் போதைப்பொருள் பாவனையை ஒழித்து தொழில் வாய்ப்புக்களை பெற்று நாட்டின் வளங்களை பயன்படுத்துவதற்கான திட்டங்களை அமுல்படுத்துங்கள்.

சிகரெட்டின்  விலை மற்றும் வரிகளை  அதிகரித்து அத்தியவசியமான பொருட்களின் விலைகளை குறைத்தால் மக்களின் வாழ்வாதாரம் நிலையானதாக அமையும் என மேலும் குறித்த சந்திப்பின் போது உயர்ஸ்தானிகர்களிடத்தில் எடுத்துக்காட்டினார்.

IMG 20211013 WA0015 இளைஞர்களின் தொழில் வாய்ப்பு விடயங்களில் கவனம் செலுத்துங்கள், நோர்வே நெதர்லாந்து துாதுவர்களிடம் கோரிக்கை

இந்நிலையில், முன்னதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர்  மற்றும் நெதர்லாந்து  துாதுவர் ஆகியோர், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை, திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் சந்தித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad இளைஞர்களின் தொழில் வாய்ப்பு விடயங்களில் கவனம் செலுத்துங்கள், நோர்வே நெதர்லாந்து துாதுவர்களிடம் கோரிக்கை

Leave a Reply