தேசிய கராத்தே அணிக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து முதன்முறையாக பெண் வீரர் ஒருவர் தெரிவு

95 Views

கிழக்கு மாகாணத்திலிருந்து முதன்முறையாக பெண்

தேசிய கராத்தே அணிக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து முதன்முறையாக பெண் வீரர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இருவர் மட்டக்களப்பிலிருந்து தெரிவுசெய்யப் பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியிலிருந்து தேசிய கராத்தே அணிக்கு தெரிவுசெய்யப்பட்ட வீரர்,வீராங்கனையை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்றது. மட்டக்களப்பு ஜப்பான் கராத்தே மரியோகிக்காய் சங்கத்தின் வீரர் மற்றும் வீராங்கனைகளே இவ்வாறு தேசிய கராத்தே அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு ஜப்பான் கராத்தே மரியோகிக்காய் சங்கத்தின் பிரதான போதனாசிரியர் பொறியியலாளர் சிகான் முருகேந்திரன் வழிகாட்டலில் போதனாசிரியர் எச்.ஆர்.சில்வாவின் பயிற்றுவிப்பு ஊடாக ஆர்.துஸ்யந்தன் என்னும் வீரரும் வி.விதுஜா என்னும் வீராங்கனையும் இவ்வாறு தேசிய கராத்தே அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்திலிருந்து முதன்முறையாக பெண்னொருவர் தேசிய கராத்தே அணிக்கு மட்டக்களப்பிலிருந்து தெரிவுசெய்யப் பட்டுள்ளதுடன் 21வயதுக்குட்பட்ட தேசிய அணியில் முதன்முறையாக மட்டக்களப்பிலிருந்து ஆண் ஒருவரும் தெரிவுசெய்யப் பட்டுள்ளனர்.

இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபையின் விளையாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு ஜப்பான் கராத்தே மரியோகிக்காய் சங்கத்தின் போதனாசிரியர் எச்.ஆர்.சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 தேசிய கராத்தே அணிக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து முதன்முறையாக பெண் வீரர் ஒருவர் தெரிவு

Leave a Reply