கிறிஸ்தவ நாடுகளின் நிதி உதவியை நிறுத்தியது இந்தியா

432 Views

கிறிஸ்தவ நாடுகளின் நிதி உதவி

இந்தியாவில் செயற்பட்டுவரும் அன்னை திரேசா தொண்டு நிறுவனத்திற்கு கிறிஸ்தவ நாடுகளின் நிதி உதவியை இந்தியா நிறுத்தியுள்ளது.

1950 களில் இருந்து வறிய மக்களுக்கு உதவிகளை வழங்கி வரும் இந்த நிறுவனத்தின் நிறுவுனரான அன்னை திரேசா 1997 ஆம் ஆண்டு மரணமடைந்திருந்தார்.

இந்த நிறுவனம் உலகம் எங்கும் 3000 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், பாடசாலைகள், வைத்தியசாலைகள், ஆதரவற்ற சிறுவர்கள், சமூக நிறுவனங்கள் போன்றவற்றிற்கு உதவிகளை வழங்கி வருகின்றது.

தற்போது புதிதாக கொண்டு வரப்பட்ட சட்டத்தின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்கள் நிதி பெறுவதை பிரதமர் மோடி அரசு தடை செய்துள்ளது.

இதனிடையே இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பர்னாஜி தெரிவித்துள்ளார். எனினும் இந்திய அரசு வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதை மறுத்துள்ளது.

இந்துத்துவ சக்திகளின் ஆதிக்கம் மோடி தலைமையிலான அரசில் அதிகரித்துவரும் நிலையில் மோடி அரசு புதிய தடையைகொண்டு வந்துள்ளது. இந்தியாவின் 1.37 பில்லியன் மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் 2.3 விகிதம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்துக்களே அங்கு பெரும்பான்மையானவர்கள். 22,000 நோயாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உணவு மற்றும் மருந்து இல்லாது துன்பப்படுவதாக பர்னாஜி மேலும் தெரிவித்துள்ளர்.

இதனிடையே, இந்தியாவின் பல பகுதிகளில் நத்தார் தின விழாக்களுக்கு இந்துக்கள் இடையூறுகளை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் 1.37 பில்லியன் மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் 2.3 விகிதம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்துக்களே அங்கு பெரும்பான்மையானவர்கள்.

Tamil News

Leave a Reply