கொழும்பில் விவசாயிகள் போராட்டம்

149 Views

விவசாயிகள் போராட்டம்

மன்னார் மடுக்கோயில் மோட்டை காணியில் விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகள், பாராளுமன்ற பகுதியில் சில கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த விவசாயிகள் தாம் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவரும் கோயில் மோட்டை காணிகளை பறிக்க முற்படும் மன்னார் பங்குத்தந்தைகளை கண்டித்தும், குறித்த காணியை விவசாயிகளுக்கு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும் பாராளுமன்ற சுற்றுவட்டப் பகுதியிலுள்ள தியவன்னா ஓயா பகுதியில் விவசாயிகள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்குரிய காணி அதிகாரம் இருக்கையில், அதன் பிரகாரம் தாம் தங்களுடடைய வாழ்வாதார விடயங்களை மையப்படுத்திய விவசாய நடவடிக்கைகளை குறித்த காணியில் முன்னெடுத்து வந்துள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்தனர்.

மன்னாரில் புதிதாக மத அரசியல் செய்யாதீர். 85 வீதம் கிறிஸ்தவர்கள் இருக்கும் கோயில் மோட்டை விவசாயிகளின் பிரச்சினையை மதப்பிரச்சினையாக மாற்றாதே,  போன்ற பதாதைகளை குறித்து போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் ஏந்தியிருந்தனர்.

மேலும் இதே இடத்தில் இந்த மாதம் (ஒக்டோபர்) கடந்த 06-ம் திகதி மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோயில் மோட்டை விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad  கொழும்பில் விவசாயிகள் போராட்டம்

Leave a Reply