அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புக்களின் தலைவர்களும் விவசாயிகளும் புதன்கிழமை (24) அநுராதபுரம் தம்புத்தேகம நகரில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கம் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கோரியும் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லினை விற்பனை செய்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கலைந்து, சிறந்த உத்தரவாத விலையினை நிர்ணயம் செய்து கொள்வனவு செய்தல் உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வினை பெற்றுத் தருமாறு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



