பிரபல தபேலாக் கலைஞர் சதா வேல்மாறன் மறைவு!

426 Views

கலைஞர் சதா வேல்மாறன்
ஈழத்தின் மூத்த பிரபல்யமான தபேலா வாத்தியக் கலைஞர் சதா வேல்மாறன் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலைக்குச் சென்ற போதே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் ஒலிப்பதிவாகிய கணிசமான பாடல்கள், பெருமளவான பக்திப்பாடல்களுடன் ஆயிரக்கணக்கான அரங்க நிகழ்வுகளிலும் அவர் அணி இசை செய்துள்ளார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களால் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, நூற்றுக்கணக்கான மாணவர்களையும் மிருதங்க, தபேலாக் கலைஞர்களாகவும் உருவாக்கிய பெருமைக்குரியவராகவும் அவர் விளங்கியுள்ளார்.

  ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply