வவுனியா முதியோர் இல்லத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று; மூன்று பேர் உயிரிழப்பு

244 Views

50 பேருக்கு கொரோனா தொற்று
வவுனியாவில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அந்த காப்பகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூவர் மரணமடைந்துள்ளனர் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

வவுனியா, பம்பைமடுப் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தைச் சேர்ந்த இருவர் கடந்த சில நாள்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் மரணமடைந்த நிலையில், நேற்றும் ஒருவர் மரணமடைந்தார்.

அத்துடன், குறித்த காப்பகத்தில் இருப்பவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply