போலி செய்திகள்- சீனாவுக்கு சுவிட்சர்லாந்து தூதரகம் எச்சரிக்கை

fotolia 69870012 s newslarge போலி செய்திகள்- சீனாவுக்கு சுவிட்சர்லாந்து தூதரகம் எச்சரிக்கை

சீனாவில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம், போலியான செய்திகள் மற்றும் பதிவுகள் சிலவற்றை நீக்கும்படி சீனாவை வலியுறுத்தியுள்ளது.

சில தினங்களாக சீன ஊடகங்களில் சுவிட்சர்லாந்தின் தாவரவியல் நிபுணர் என்று சொல்லப்படும் நபர் தொடர்பான செய்திகள் உண்மையில் இல்லை என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

கோவிட் – 19-ன் தோற்றம் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் சுயாதீனம் ஆகியவை குறித்த செய்திகளில் அரசு ஊடகம் உட்பட பல்வேறு ஊடகங்கள் வில்சன் எட்வேர்ட் என்னும் நபரை சுட்டிக் காட்டியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் இந்த அறிக்கைக்கும் பிறகு பல ஊடகங்கள் அந்த செய்தியை நீக்கியுள்ளது.

சிஜிடிஎன், ஷாங்காய் டெய்லி, குளோபல் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் அந்த நபரின் முகநூல் பக்கத்தை வைத்து சுட்டிக் காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஆனால் அந்த முகநூல் கணக்கு தொடங்கப்பட்டு மூன்று வாரங்கள்தான் ஆகிறது என்றும், மூன்று பேர் மட்டுமே நண்பர்கள் பட்டியலில் உள்ளனர் என்றும் சுவிட்சர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்தே போலியான செய்திகள் மற்றும் பதிவுகள் சிலவற்றை நீக்கும்படி சீனாவை சுவிட்சர்லாந்து தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

ilakku-weekly-epaper-141-august-01-2021