அம்பாறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 227 பேருக்கு தொற்று

146 Views

IMG 20210811 WA0003 அம்பாறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 227 பேருக்கு தொற்று

அம்பாறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் அதிகளவிலான  கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று   இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கிழக்கு மாகாண கொரோனா நிலவரங்கள் தொடர்பில் கருத்துரைக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 837 பேர் இனங் காணப்பட்டுள்ளதுடன் ஐந்து மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஆகக் கூடுதலாக அம்பாறை பிராந்திய சுகாதார சேவை பிரிவில் 227 பேர் இணங் காணப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பில் 342 பேரும், ஒரு மரணமும் ஏற்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில்  163 பேரும் மூன்று மரணங்களும், கல்முனையில் 105 பேரும் ஒரு மரணமும் ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மூன்றாவது அலையில் கிழக்கு மாகாணத்தில் ஆகக் கூடுதலான எண்ணிக்கையாகும். மூன்றாவது அலையில் மொத்தமாக 20 ஆயிரத்து 204 நோயாளிகள் இனங் காணப்பட்டுள்ளதுடன்  393 மரணங்களும் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் வழங்கிய தடுப்பூசிகளில் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு இலட்சம் பேருக்கும் கல்முனை பிராந்திய சுகாதார சேவை பிரிவில் 188743  மட்டக்களப்பு 301281,அம்பாரை  மாவட்டத்தில் 129590 முதல் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply