குடிநீருக்கான தடையும் இனஅழிப்பே – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

காசாவில் உள்ள மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை இஸ்ரேல் தடை செய்துள்ளது என்பது ஒரு இன அழிப்பாகவே கருதப்பட வேண்டும் எனவே அனைத்துலக சமூ கம் இஸ்ரேல் மீது தடைகளை கொண்டுவர வேண்டும் என வொசிங்டனைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த வியாழக்கிழமை(19) வெளியிட்ட தனது 184 பக்க அறிக்கையில் தொவித்துள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் இருந்து இஸ்ரேல் காசா பகுதி மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றது. அன்றுமுதல் திட்டமிட்ட வகையில் அது காசா வுக்கான குடி  நீரையும் தடுத்த வருகின்றது. பொதுமக்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திற் காகவே இஸ்ரேல் குடிநீரையும் தடுத்து வருகின்றது என அந்த அமைப்பின் மத்திய கிழக்கிற்கான பணிப்பாளர் லாம பகீத் தெரிவித்துள்ளார்.

அங்குள்ள மக்களில் 115 மக்கிளிடம் நாம் செய்மதி தொலைபேசிகள் மூலம் நேர் காணல்களை மேற்கொண்டிருந்தோம். அவர்கள் கூறிய கருத்துக்கள் உண்மையானவை. இஸ்ரேல் நான்கு வழிகளில் குடி நீரை தடுத்து வருகின்றது.

முதலில் இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு வரும் நீர் குழாய்கள் மூடப்பட்டுள்ளன. நீர் இறைக்கும் இயந்திரங்களுக்கான  மின்சாரம் தடுக்கப்பட்டுள்ளது.  மூன்றாவதாக கழிவுநீர் செல்லும் வழிகளையும் இஸ்ரேல் பார இயந்திரங்கள் மூலம் அழித்துள்ளது. இறுதியாக அதனை திருத்துவதற்கான முயற்சிகளையும் அது வேண்டுமென்றே தடுத்து வருகின்றது.

தொழில்நுட்பவியலாளர்களையும் படுகொலை செய்வதுடன், காசா பகுதிக்கு செல்லும் நிவாரணங்களையும் இஸ்ரேல் தடுத்து வருகின்றது. இது பெருமளவான மக்களை அங்கு படுகொலை செய்வதற்கான திட்டமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இஸ்ரேல் வைத்தியசாலை கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் வைத் தியர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் ஒரு இனஅழிப்பு என எல்லைகள் கடந்த மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 14 மாதங்களில் தமது அமைப்பின் மீது 41 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.