மாமனிதர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வழியில் மேதகுவின் 72 அவது பிறந்த நாள் நிகழ்வு இடம்பெறும்! நவ-26 வல்வெட்டித்துறையில் அணிதிரளுமாறு அழைப்பு! -இரா.மயூதரன்

WhatsApp Image 2026 11 21 at 4.15.34 PM மாமனிதர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வழியில் மேதகுவின் 72 அவது பிறந்த நாள் நிகழ்வு இடம்பெறும்! நவ-26 வல்வெட்டித்துறையில் அணிதிரளுமாறு அழைப்பு! -இரா.மயூதரன்

மறந்த மாமனிதர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் வழியில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 72 வது பிறந்த நாள் நிகழ்வு வழமை போன்று முன்னெடுக்கப்படும் எனவும் நவம்பர் 26 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும், வடமராட்சி அமைப்பாளருமான வி.கவிச்செல்வன் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 72 வது பிறந்த நாள் நிகழ்வு வரும் 26 ஆம் திகதி வியாழக்கிழமை உலகத்தமிழர்களால் கொண்டாடப்பட உள்ளது.

உலகெங்கும் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றாலும் தலைவர் பிரபாகரன் அவர்கள் சிறுவயதில் வாழ்ந்த இடமான ஆலடி வீதியில் உள்ள காணியில் வருடா வருடம் மாமனிதர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் தலைமையில் எழுச்சி பூர்வமாக பிரதான நிகழ்வு இடம்பெறுவது வழக்கம்.

இம்முறை 72 வது பிறந்த நாள் அண்மித்துள்ள நிலையில் அவர் மறைந்துவிட்டார். இருப்பினும் அவரது வழியில் எத்தடை வரினும் அதே இடத்தில் மேதகு அவர்களின் பிறந்த தின நிகழ்வை வருடா வருடம் கொண்டாடியே தீருவோம். மாமனிதர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் வழியில் அவர் முன்னெடுத்த விடயங்களை தமிழ்த் தேசியக் கட்சியின் சார்பில் முன்னெடுப்போம்.

எனவே ஊர் மக்கள் உள்ளிட்ட தமிழ் மக்கள் நவம்பர் 26 அன்று வல்வெட்டித்துறையில் மேதகுவின் 72 வது பிறந்த நாளை வெகு சிறப்பான முறையில் கொண்டாட பெரும் எழுச்சியுடன் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். என்றார்.