ஸ்பெயின் நாட்டின் ஹனரி தீவுகள் அருகே ஏதிலிகள் படகு கவிழ்ந்து விபத்து: 52 பேர் பலி

554 Views

1000x563 cmsv2 15bf9466 44f3 5bc6 80fc d0f8627f23f3 5779412 ஸ்பெயின் நாட்டின் ஹனரி தீவுகள் அருகே ஏதிலிகள் படகு கவிழ்ந்து விபத்து: 52 பேர் பலி

ஸ்பெயினில் ஏதிலிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 52 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் இருந்து 53 பேருடன் அட்லாண்டிக் கடல் வழியே ஸ்பெயினை நோக்கி படகு ஒன்று பயணத்தை தொடர்ந்துள்ளது.

அந்த படகு ஸ்பெயின் நாட்டின் ஹனரி தீவுகளுக்கு 220 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் கடலில் பயணம் செய்திகொண்டிருந்தபோது திடீரென விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

நீண்ட நேரத்திற்கு பிறகு விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் படகின் உடைந்த பாகங்களை பிடித்தபடி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply