ரஷ்யாவில் சகோதர படுகொலைகள் நடக்க வேண்டுமென்றே எதிரிகள் விரும்புகின்றனர்: அதிபர் புதின்

ரஷ்யாவில் சகோதர படுகொலைகள் நடக்க வேண்டுமென்றே மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன என்று அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

வாக்னர் அமைப்புடன் ஏற்பட்ட உடன்படிக்கைக்குப் பின் ரஷ்ய அதிபர் புதின் நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது அவர், “நிகழ்வுகள் தொடங்கியதிலிருந்து இரத்தம் சிந்தப்படுவதை தவிர்க்கும் நடவடிக்கைகளை எடுத்தேன். இதில் ரஷ்யர்களின் தேச பக்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது எதிரிகள் துல்லியமாக விரும்புவது இந்த சகோதர படுகொலையைத்தான்.

கீவ் நகரில் உள்ள நாஜிக்களும் அவர்களின் மேற்கத்திய ஆதரவாளர்களும், தேச துரோகிகளும் ரஷ்ய வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால், பொதுமக்கள் ஒற்றுமையாக இருந்தால் எந்த ஒரு கலகமும் தோல்வி அடையும் என்று இந்த நிகழ்வு காட்டுக்கிறது. வாக்னர் அமைப்பினர் மீண்டும் ரஷ்ய இராணுவத்தில் சேரலாம். ரஷ்யாவில் உள்ள உங்கள் வீடுகளுக்கு திரும்பலாம். இல்லை என்றால், நீங்கள் பெலரஸ்ஸுக்கு வேண்டுமானலும் செல்லலாம்.” என்றார்.