கிழக்கு மாகாண பாடசாலைகளில்  சேதனப் பசளை மூலமான தோட்டங்களை அமைக்க ஆளுநர் அறிவுரை

பாடசாலை காலம் தொடங்கிய பின்னர் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஒரு மாதிரி சேதனப் பசளை தோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற  கூட்டத்தில், உரையாற்றிய போது ஆளுநர் இந்த அறிவிறுத்தலை விடுத்துள்ளார்.

மேலும் இந்த புதிய கருத்தை மாணவர்களின் இதயங்களில் அறிமுகப்படுத்துவதன் மூலம், நாட்டின் எதிர்கால தலைமுறை நிச்சயமாக நிலையான விவசாயத்தை நோக்கி நகரும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் தொடங்குவதற்கு முன்னர் இது குறித்து அனைத்து அதிபர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.