கிழக்கு கொள்கலன் முனையத்திற்கான ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கு வழங்கி வைப்பு

436 Views

கிழக்கு கொள்கலன் முனையத்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் யு.டி.சி. தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒப்பந்த நடைமுறையை தொடர்ந்து China Harbour Engineering நிறுவனத்திற்கும் உள்ளூர் நிறுவனத்திற்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு நிறுவனங்களும் இணைந்து கிழக்கு கொள்கலன் முனைய கட்டுமானத்தில் ஈடுபடும் என்றும்  அதற்கான கட்டுமான செலவீனமானது 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் கட்டுமான நோக்கங்களுக்காக உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கான மொத்த செலவு 282 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad கிழக்கு கொள்கலன் முனையத்திற்கான ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கு வழங்கி வைப்பு

Leave a Reply