அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டும்- அமெரிக்கா

443 Views

அரசியல் கைதிகளை விடுதலை

சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு  உலக நாடுகளும் முன்வர வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே.பிளிங்கென் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து நாடுகளிடமும் கோருகின்றோம். எமக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையில் காணப்படக்கூடிய உறவிற்கு அப்பால் அரசியல் கைதிகளை விடுவிக்க அந்நாடுகள் முன்வர வேண்டும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசியல் கைதிகள் தொாடர்பான கலந்துரையாடலில் பங்கேற்றுக்கொண்ட இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே.பிளிங்கென், அங்கு உரையாற்றுகையிலேயே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

“அரசியல் கைதிகள் சில சந்தர்ப்பங்களில் அவர்களது இனம்,மதம்,மொழி,அவர்கள் யாரை நேசிக்கின்றார்கள் என்பன உள்ளடங்களாக அவர்களது அடையாளத்திற்காக இலக்குவைக்கப் படுகின்றார்கள். சிறைவைக்கப்படும் கைதிகள் சித்திரவதைகளுக்கும் மனிதாபிமானமற்ற முறையிலான நடத்தைகளுக்கும் உள்ளாக்கப்படும் அதேவேளை, அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளும் மறுக்கப்படுகின்றன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply