ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் எந்தவித அழுத்தங்களும் இல்லை; பொலிஸ் மா அதிபர்

492 Views

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை- எந்தவித அழுத்தமும் இல்லைஈஸ்டர் தாக்குதல் விசாரணை- எந்தவித அழுத்தமும் இல்லை, “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் இரகசியத் தன்மையுடன் நடத்தப்படுவதால், அது தொடர்பிலான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாதுள்ளது. வழக்கு விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், விசாரணைகள் தொடர்பில் முழுமையான விபரங்களை கூற முடியவில்லை” என பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்தார்.

“நாட்டில் நடைமுறையிலுள்ள குற்றவியல் சட்டத்தின்படி பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்தது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளையில், இந்த விசாரணைகளில் வெளியேயிருந்து எந்தவிதமான அழுத்தங்களும் பிரயோகிக்கப் படவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் குறித்து போதிய தெளிவின்மையால், சமூகத்தில் தவறான அபிப்பிராயம் நிலவுவதாக பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன குறிப்பிட்டார். இதனால் சில தரப்பினர் இந்த விசாரணைகள் தொடர்பில் அடிப்படையற்ற குற்றச் சாட்டுகளை முன்வைப்பதை அண்மைக் காலமாக அவதானிக்க முடிவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் விரிவான அறிக்கை ஒன்றை அவர் நேற்று வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் இரகசியத் தன்மையுடன் நடத்தப்படுவதால், அது தொடர்பிலான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாதுள்ளது. அது வழக்கு விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், விசாரணைகள் தொடர்பில் முழுமையான விபரங்களை கூற முடியவில்லை.

சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் நடத்திய தொடர் குண்டுத்தாக்குதல் குறுகிய காலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. அது நீண்டநாள் திட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்பட்டதை தாக்குதலுக்கு முன்னர் இடம்பெற்ற தொடர் சம்பவங்கள் உறதிப்படுத்துகின்றன.

காத்தான்குடியில் சஹ்ரான் குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப் படவில்லை.

தற்போதைய ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச பதவிக்கு வந்தபின்னர் முழுமையான விசாரணைகளை நடத்துவதற்கான சுதந்திரம் கிடைத்துள்ளது. இதன்படி பயங்கரவாதிகளின் ஒரு லட்சம் தொலைபேசி உரையாடல்களை ஆய்வுக்கு உட்படுத்திய போது பல்வேறு விடயங்கள் தெரியவந்தன. அதேபோல பயங்கரவாதிகளின் 365 மில்லியன் ரூபா பணமும், 168 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக 146 பேருக்கு எதிராக 11 குற்றப்பத்திரிகைகள் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. 723 சந்தேகநபர்கள் இச்சம்பவம் தொடர்பாக கைதாகி விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதில் 311 பேர் தற்போதும் தடுப்புக் காவலில் உள்ளனர்.

நாட்டில் தற்போதுள்ள குற்றவியல் சட்டத்தின்படி பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப் பட்டவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்தது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதே வேளையில், இந்த விசாரணைகளில் எந்தவிதமான அழுத்தங்களும் பிரயோகிக்கப் படவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply