இலங்கையில் இன்றும் நில நடுக்கம்- பாதிப்பேதும் இல்லையெனத் தகவல்

வெல்லவாய நகரை அண்மித்த பகுதியில் இன்று (11) காலை 2.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

ஆனால் நிலநடுக்கத்தால் எந்த ஆபத்தும் இல்லை என்று புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் கூறியுள்ளது.

நேற்றும் இப்பிரதேசத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.