உலகில் பரவி வரும் பறவை காய்ச்சல் மனிதர்களையும் பாதிக்கும்-WHO

உலகில் பரவி வரும் பறவை காய்ச்சல் மனிதர்களையும் பாதிக்கும் வாய்ப்பு மிக அருகாமையில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மனிதர்களுக்கு தொற்றும் இந்த பறவை காய்ச்சல்  தொடர்பில் கடுமையான எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ளது. பறவைகளிலிருந்து பாலூட்டும் விலங்குகளுக்கு தொற்று பரவியுள்ளதையடுத்து உலக சுகாதார அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுவரை பறவை காய்ச்சல் பறவைகளில் மட்டும் காணப்பட்ட போதும், தற்போது நீர் நாய்கள், நரிகள் ஆகியவற்றில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மனிதர்களைப் பாதிக்கும் வாய்ப்பு மிக அருகாமையில் இருப்பதாகவும் நடவடிக்கை எடுக்க உலக சுகாதார அமைப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை முன்னெடுக்க நாடுகள் தயாராக வேண்டுமெனவும் உலக சுகாதார அமைப்பு கேட்டுகொண்டுள்ளது.