ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர சீனாவின் உதவி தேவையில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அரசுமுறை பயணமாக சீனா செல்வதற்கு முன்பாக ட்ரம்ப் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தனது சீன பயணத்தின்போது அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் உடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
“நாங்கள் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. வெளிப்படையாகச் சொன்னால், எங்களின் நிகழ்ச்சி நிரலில் ஈரான் இல்லை, ஏனெனில் ஈரானை ஏற்கெனவே எங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம்,” என்று தெரிவித்தார் ட்ரம்ப்.
ஈரான் தொடர்பாக பேசிய ட்ரம்ப், “ஒன்று நாங்கள் ஒப்பந்தத்தை அடைவோம் அல்லது ஈரான் அழிக்கப்படும்.” என எச்சரித்தார்.
மே 13 முதல் 15 வரை அரசு முறை பயணமாக ட்ரம்ப் சீனா வருவதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். முதலில் மார்ச் மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் பயணம் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் பின்னர் தள்ளிவைக்கப்பட்டது.



